இலவச மின்சாரம் தொடரும்! ஜெயக்குமார்

சென்னை,

ன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்கனவே உள்ளபடி இலவச மின்சார திட்டம் தொடரும் என்றும் அறிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் தமிழகம் கடும் நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இலவச மின்சார திட்டமும் தொடரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றா மூலம் பெறப்படும் உபரி  மின்சாரத்தை வெளிமாநிலத்த துக்கு விற்க புதிய வழித்தடம் அமைக்கப்படும் என்றும்,

உலக முதலீட்டாளர் மாநாட்டு நடத்த ரூ75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளது என்றார்,

மின் உற்பத்தி பகிர்மான கழகம் 30400 கோடி கடன் சுமையில் உள்ளது. இதில் 75 சதவிகித கடன் சுமையை அரசே ஏற்றுள்ளது.  அரசே கடன் சுமையை ஏற்பதால் அந்த நிறுவனத்தின் கடன் சுமை, வட்டி சுமை குறையும் என்றும், வட்டி சுமை குறைவதால், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.201 கோடி ஆண்டுதோறும் சேமிப்பு ஏற்படும் என்றார்.

மேலும், மத்திய அரசின் உதய் மின்  திட்டத்தை செயல்படுத்துவதால், தமிழக அரசு மற்றும் மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கும் வட்டி செலவு குறைவதால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1335 கோடி அளவுக்கு சேமிப்பு ஏற்படும்.

தமிழக மின் உற்பத்தி பகிர்மான கழகம் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய, ரூ.4523 கோடி அளவுக்கான கடன்கள் மற்றும் வட்டி ஆகியவை 2016-17ல், பங்கு மூலதன உதவியாக அரசால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்த கழகத்தின் நிதி நிலை மேலும் வலுப்பெறும். அதன் கட்டுப்பாட்டில் உள்ள புனல் மின்நிலையங்கள் அதன் வடிவமைப்பு காலத்திற்கு மேல் கடந்துவிட்ட நிலையில் புதுமையான நிதி திரட்டும் நடவடிக்கையாக வருவாய் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட உள்ளோம்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும்.

விவசாயம், இதர பயன்பாடுகளுக்கான மின்சார செலவீனங்களுக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தம் 8538 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.