தாலின்:

ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவில் அனைத்து மக்களுக்கும் போக்குவரத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.


எஸ்தானியாவில் கடந்த 2008-ம் ஆண்டு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

அப்போது எஸ்தானியா பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. பேருந்து கட்டணம் 70 சதவீதத்துக்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது நிதி நெருக்கடியை சமாளித்துள்ள எஸ்தோனிய அரசு, நிதி நெருக்கடியின்போது அரசுக்கு ஒத்துழைத்த மக்களுக்கு நன்றிக் கடனை திருப்பி செலுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பேருந்துகளில் பயணம் செய்தால் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. எங்கு வேண்டுமானாலும் இலவசமாகவே பயணிக்கலாம்.

பேருந்துகள் அனைத்தும் சரியான நேரத்துக்கு வருகின்றன. பேருந்த புதிதாகவும், பளபளப்பாகவும் உள்ளன.

2013 முதல் தன் நாட்டு மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கி வரும் எஸ்தோனியா, உலகிலேயே பேருந்த சேவையை இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.