கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு ஜூன் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில், மாநிலத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஊரடங்கில் சில தளர்வுகளாக பொதுமக்கள் காலையில் 5.30 மணி முதல் 8.30 மணி வரை வாக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது சமூக இடைவெளியை கட்டாயம் என்றும், திருமண விழாவில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 25 பேரும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.