சென்னை:
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, இந்த மாதமும் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச உணவுப்பொருட்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி  தொடங்குகிறது. 9 ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 1லட்சத்தை தாண்டிய நிலையில், பல்வேறு தளர்வு களுடன் 6வது கட்டமாக ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைதாரர்களுக்கும், ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் அரிசி உள்ளிட்டவை ஜூலை 10-ஆம் தேதி முதல் ரேசன் கடையில் விநியோகிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
அதன்படி, இன்று (6ந்தேதி) முதல் வரும் 9ந்தேதி வரை  ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று டோக்கன் விநியோகம் பணி தொடங்குகிறது. பொதுமக்கள் தங்கள் டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேசன் கடைக்கு சென்று பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.