Random image

2019 கல்விஆண்டு முதல் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச ஷூ: செங்கோட்டையன்

சென்னை:

டுத்த கல்வியாண்டு முதல்  அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா செருப்பு களுக்கு பதில் ஷூ வழங்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றப்படும் என்று அறிவித்துள்ள கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அதற்கான பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் புதிய முறைகளை புகுத்தி உள்ள தமிழக அரச,  அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகளையும் தனியார் பள்ளிகள் போல மாற்றி உள்ளது. இந்த நிலையில், அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் செருப்புகளுக்கு பதில் ஷூ வழங்கப்படும் என்று அமைச்சர் கூறி உள்ளார்.

கடந்த 2017-18-ம் ஆண்டில் 1 முதல் 10 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 60 லட்சம் விலை யில்லா செருப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் அதே அளவுக்கு அடுத்த ஆண்டு ‘ஷூ’ வழங்க அரசுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக முன்னணி நிறுவனங்களிடம் இருந்து விலைப் புள்ளிகள் பெறப்பட்டு தகுதியான நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட இருப்பதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் ஷூக்கள் கருப்பு -1, வெள்ளை -1 என தலா 2 ஷூக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.