சென்னை: மெட்ரோ ரெயில் இலவச பயணம் நாளையும் தொடர்கிறது

சென்னை:

சென்னை சென்ட்ரல் மற்றும் டிஎம்எஸ் ஆகிய புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து 3 நாட்களுக்கு சென்ட்ரல்&விமான நிலையம், டிஎம்எஸ்&விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

இதன் மூலம் லட்சகணக்கான மக்கள் பயணித்தனர். எனினும் இலவச சேவை இன்றும் நீடித்தது. தொடர்ந்து நாளையும் (29.5.18) இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.