சென்னை:

யிலாப்பூரில் உள்ள நாகேஷ்வர ராவ் பார்க்கில் இலவச வைஃபை தொடங்கப்பட்டுள்ளது. தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் ஐபிஎஸ் முன்னிலையில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வைஃபை வசதியை தொடங்கி வைத்தார்.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என தமிழகஅரசு அறிவித்தி ருந்தது. அதன்படி, பேருந்து நிலையம் உள்பட பல முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி  செய்யப்பட்டு வருகிறது. அதுபோல, மக்கள் அதிகம் கூடும் பூங்காக்களிலும் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மதுரையில் உள்ள மாநகராட்சி பூங்காவில்இலவச வைஃபை வசதி செய்யப்பட்டது. பூங்காக்களில் உடல் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சியை ஊக்குவிக்ககும் வகையில், செல்போனில் 45 நிமிடங்கள் வரை இந்த வைஃபை வசதி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வைஃபை டிவைஸ் வடிவமைக்கப்படுகிறது.

சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் நேற்று வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டது.  மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்  நடராஜ்,I.P.S,DGP(R) முயற்சியால், ACT நிறுவனத்தின் மூலம் மயிலாப்பூர் , நாகேஷ்வரா பார்க்கில் இலவச “Hot Spot wifi” வசதியை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தென்சென்னை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும்த குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.