ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் இலவச வைஃபை இந்த ஆண்டுக்குள் நிறுத்தம்!

டெல்லி:

சென்னை உள்பட இந்தியாவின் பல ரயில்நிலையங்களில் இலவச வைஃபை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை கூகுள் நிறுவனம் செய்து வருகிறது. தற்போது இந்த சேவையை படிப்படியாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.

இன்றைய நவீன இயந்திரத்தனமான டிஜிட்டல் உலகில், அனைத்து தேவைகளுக்கும் இன்டர்நெட் இன்றியமை யாததாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே நாட்டின் மூலை முடுக்குகளில் இன்டர்நெட் சேவையை, தொலைத்தொடர்பு சேவை  நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

அதுபோல சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில்,  ரயில்வே துறையின் ரயில்டெல் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து,  இலவச அதிவேக வைபை சேவையை வழங்கி வருகிறது..

இந்த நிலையில், இந்தியாவில் வழங்கும் இலவச வைஃபை சேவை படிப்படியாக நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.  இந்தியாவில் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம் மலிவாக இருப்பதால், இலவச வைஃபை சேவையை  இந்த ஆண்டு இறுதிக்குள்  படிப்படியாக நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது.