Random image

சென்னை மெட்ரோ ரெயில்களில் விரைவில் இலவச வை-பை வசதி….

சென்னை:

சென்னையில்  அமைந்துள்ள மெட்ரோ ரெயில் மற்றும்  ரெயில் நிலையங்களிலும் விரைவில் ‘வை-பை’ வசதி அறிமுகம் செய்யப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் நடைபெற்று மெட்ரோ ரெயில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல இடங்களுக்கு போக்குவரத்து நடைபெற்ற வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக மீனம்பாக்கத்துக்கும், மற்றொரு வழித்தடத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ். வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் டி.எம்.எஸ். – சென்ட்ரல் இணைக்கப்பட்டதும் இந்த திட்டம் நிறைவு பெறும்.

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக  விரைவில் மெட்ரோ ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் ‘வை-பை’ வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக ரெயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் பயணிகள் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம்.

இதற்காக தனி ‘செயலி’யை உருவாக்கும் முயற்சியில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது என்று மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரி கூறினார்.