விடுதலை போராட்ட வீரர் சுகதேவ்

ந்திய விடுதலைக்காக வீரமரணம் அடைந்து, இன்றும் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழும் சுகதேவ் 1907ஆம் ஆண்டு மே 15ம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார். இவரின் முழு பெயர் சுகதேவ் தாபர்.

இவர் பகத்சிங்குடன் அறிமுகம் ஏற்பட்டு, ஒத்துழையாமை இயக்கம், அந்நிய ஆடைகள் எதிர்ப்பு, சைமன் கமிஷன் வருகை எதிர்ப்பு போன்றவற்றில் கலந்துகொண்டு வரலாற்றில் இடம்பெற்றவர்.

புரட்சி வீரர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று காந்திஜி அறிக்கை விட்ட போது அதற்கு இவர் காந்திஜிக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபலமானது.

மத்திய சிறையில் 15 நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். சிறையில் பகத்சிங் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட என்பதை உணர்த்திய இவர் தனது 24வது வயதில் (1931) தூக்கிலிடப்பட்டார்.