எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு! ப.சிதம்பரம்

சென்னை: எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு முன்னாள் மத்திய காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரம் சுதந்திர தின வாழ்த்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம்,  இன்று நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக் களை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு

சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை

எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.