எழுத்தாளர் ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) அவர்களின் முகநூல் பதிவு:
டலூர் அருகே உள்ள பல்லவராயநத்தம் என்ற கிராமத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் எட்டு நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவில் 3 ஆம் நாள் திருவிழா அவ்வூர் தலித் மக்களால் நடத்தப்படுகிறது. மற்ற நாள்கள் திருவிழாவின் போது கோயில் தேர் அவ்வூர் தலித் அல்லாதோர் வசிக்கும் தெருக்களில் வலம் வருகிறது. ஆனால் தலித் மக்கள் நடத்தும் 3 ஆம் நாள் திருவிழாவின் போதாவது, தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தேர் செல்ல வேண்டும் என்று, தலித்துகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
a
இதுதொடர்பாக பல்லவராயநத்தத்தைச் சேர்ந்த விசிக பொறுப்பாளர் ஜெயசீலன் தலைமையில் அவ்வூர் தலித் மக்கள் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். இன்று மாலை இதுதொடர்பாக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் இது தொடர்பான சட்டரீதியான போராட்டங்களை தலித் மக்கள் நடத்திவருகின்றனர். தலித் தெருவுக்குள் தேரோட்டம் நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் இதுவரை அந்த ஆணையை கடலூர் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவில்லை. இந்த ஆண்டு எதிர்வரும் ஆகஸ்டு 12 ஆம் தேதி திருவிழா தொடங்க இருக்கிறது.