கொரோனா தொற்றால் ஊராடங்கு அமலாவதற்கு முன்பிருந்தே டென்ஷன். மன அழுத்தம் என்ற வார்த்தை பெரும் பாலானவர் களிடமிருந்து வந்துக்கொண் டிருந்தது, அதிலிருந்து மீள்வது எப்படி என்று விவாதங்கள் நடந்துக்கொண்டி ருந்தபோது விவாதங் களில் பங்கேற்வர் களையே டென்ஷனுக்கும், மன அழுத்தத் துக்கும் உள்ளாக்கும் வகையில் கொரோனா லாக்டவுனில் சிக்கி தவிக்கின்றனர்.

மன அழுத்தம், டென்ஷனிலிருந்து விடுபட நடிகை ரம்யா நம்பீஸன் கூறும் வழி இதுதான்:
எல்லா கவலைகளிலிருந்தும், எதிர்மறை யான உணர்ச்சிகளிலிருந்தும், வாழ்க்கை நம் மீது திணிக்கும் ஏகபோக அதிகாரங்க ளிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்கு ஒரு வினையாற்றலாக இருப்பது இசையும் பாடல்களும்தான். இது இக்கட்டான சூழலிலிருந்து நாம் விடுபட ஒரு ஊக்கி யாக பயன்படுகிறது.
மனிதாபிமான பக்கத்தை எல்லா மனிதர் களுக்கும் கொண்டு வருவதற்கு இசையின் கலை வடிவம் மிக முக்கியமானது.
இவ்வாறு ரம்யா நம்பீஸன் கூறினார்.
இப்படியொரு அட்வைஸை தருவதற்கு அவர் பொருத்தமானவர் தான். ரம்யா நடிகை மட்டுமல்ல அழகான குரல் வளம் கொண்ட பாடகியும் ஆவார்.