பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ்!! நடால் 10வது முறையாக சாம்பியன்

பாரிஸ்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் ‘நம்பர் -3’ சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, 4வது இடத்தில் உள்ள ஸ்பெயின் ரபெல் நடால் ஆகியோர் மோதினர்.

இதன் முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய நடால், 2வது செட்டை 6-3 என வெற்றி பெற்றார். தொடர்ந்து அசத்திய நடால் 3வது செட்டை 6-1 என்ற கணக்கில் வென்றார். முடிவில் நடால் 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 10வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தார்.

You may have missed