பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – 3வது சுற்றில் நுழைந்த நோவக் ஜோகோவிக்!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிக். இவருடன், செக் குடியரசின் வீராங்கனை கிவிட்டோவா உள்ளிட்டோரும் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில், லிதுவேனியா நாட்டின் ரிகார்டஸ் பெரான்கிஸுடன் மோதினார் ஜோகோவிக். இப்போட்டியை, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார் ஜோகோவிக்.

மற்றொரு போட்டியில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் 5-7, 7-6, 3-6, 6-3, 6-8 என்ற கணக்கில், ஸ்பெயின் நாட்டின் ராபர்டோ கார்பாலஸ் பயினாவிடம் தோற்றார்.

பல்கேரியாவின் டமிட்ரோவ், ரஷ்யாவின் கரேன் கசானோவ் மற்றும் ஸ்பெயினின் பாப்லோ பஸ்டா ஆகியோர் தங்களுடைய 2வது சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், செக் குடியரசின் கிவிட்டோவா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை தோற்கடித்து 3வது சுற்றுக்குள் சென்றார்.