பிரான்ஸ் ஓபன் : ஸ்ரீகாந்த், சாய்னா, சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

பிரான்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து, சாய்னா நேவால் மற்றும் ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

french

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரான்ஸ் ஓபன் பேட்மின்டன் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், தென் கொரியாவின் லீ டாங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 12–21 எனக் கோட்டைவிட்ட ஸ்ரீகாந்த், பின் எழுச்சி பெற்ற ஸ்ரீகாந்த் அடுத்த செட்டை 21–16 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் அசத்திய ஸ்ரீகாந்த் 21–18 என வென்றார். முடிவில், ஸ்ரீகாந்த் 12–21, 21–16, 21–18 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

இதே போல பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவல், ஜப்பானின் ஒகுஹராவை, 10–21, 21–14, 21–17 என வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் சயாகா சாட்டோவை 21-17, 21-16 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.