கொரோனா அச்சுறுத்தல் – பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

பாரிஸ்:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் மே 24 முதல் ஜூன் 7ம் தேதி வரை நடக்க உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த தொடர் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி