பிரெஞ்சு ஓபன் – மகளிர் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறிய இகா & கெனின்

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் போலந்தின் இகா ஸயொடெக் மற்றும் அமெரிக்காவின் கெனின்.

அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவின் நாடியாவை எதிர்கொண்டார் இகா. அப்போட்டியை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார். 19 வயதான இகா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை.

மற்றொரு மகளிர் ஒற்றையர் அரையிறுதியில், பட்டம் வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட செக் குடியரசின் கிவிட்டோவா, அமெரிக்காவின் கெனினிடம் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தோற்றுப்போனார்.

இதனையடுத்து, மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இகா – கெனின் ஆகியோர் மோதுகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிக், ஸ்பெயினின் கரென்கோ பஸ்டாவை 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதியில் நுழைந்தார்.