பிரெஞ்சு ஓபன் – ஆண்கள் இறுதியில் ஜோகோவிக் vs நாடல்; பெண்கள் இறுதியில் கெனின் vs இகா

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இருபெரும் நட்சத்திரங்களான நோவக் ஜோகோவிக் மற்றும் ரஃபேல் நாடல் மோதுகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் முதல் அரையிறுதியில், ஸ்பெயினின் நாடல், அர்ஜெண்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மேன் மோதினர். இப்போட்டியில் 6-3, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார் நாடல்.

மற்றொரு அரையிறுதியில் உலகின் நம்பர்-1 வீரர் ஜோகோவிக், கிரீஸ் வீரர் ஸ்டெபானஸ் உடன் மோதினார். இப்போட்டியை 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிக் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் சோபியா கெனின் மற்றும் மற்றும் போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர். அவர்கள், இன்றைய இறுதிப்போட்டியில் மோதுகின்றனர்.