டில்லி:

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 9ந்தேதி இந்தியா வருகிறார். இதை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஜோர்டான் மன்னர் 3 நாள் பயணம், கனடா பிரதமர் 7 நாள் பயணம் என வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வந்துள்ள நிலையில், தற்போது பிரெஞ்சு அதிபரும் 4 நாட்கள் பயணமாக இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 9ந்தேதி இந்தியா வரும்  பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான், மார்ச் 10ந்தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

அப்போது, இந்தியாவுக்கும், பிரான்சுக்கும்  இடையே  இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், ஜெய்தாபூர் அணுமின்நிலையம் குறித்தும், இரு நாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.