ஹெலிகாப்டர் மூலம் தப்பிய பிரஞ்சு கைதி பிடிபட்டார்

பாரிஸ்

டந்த ஜூலை மாதம் சிறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பித்த கைதி பிடிபட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெடோயின் ஃபைட் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த ஒரு திருட்டு சம்பவத்தின் போது ஒரு காவல்துறி அதிகாரியை கொலை செய்துள்ளார்.  அதை ஒட்டி அவருக்கு 25 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.    ஆனால் ஃபைட் சிறைத்தண்டனை பெற்ற சில நாட்களில் தப்பி மீண்டும் பிடிபட்டார்.

அதற்குப் பிறகு அவர் வேறு சிறையான பாரிஸ் நகர செயின் எட் மாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.  அத்துடன் காவல் அதிகமானது.   சிறை அதிகாரிகளிடம் புதிய சிறை குறித்து பல கேள்விகள்  கேட்டுள்ளார்.   ஆகவே அதிகாரிகளில் ஒருவர் இது குறித்து மேலிடத்துக்கு புகார் அளித்துள்ளார்.   அவர் புகார் அளித்து சில நாட்களுக்குள் சென்ற ஜூலை மாதம்  அந்த சிறை வளாகத்துக்குள் ஒரு ஹெலிகாப்டர் வந்தது.

ஃபைடின் கூட்டாளி ஒருவர் அந்த ஹெலிகாப்டர் பறக்கும்  போது அதை கடத்தி சிறைக்குள் கொண்டு வந்துள்ளார்.   திரைப்படங்களில் வருவது போல் ஃபைட் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி உள்ளார்.    அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.   அவரை தப்பிக்க வைத்த கூட்டாளிகள் அவரை வேறொரு வாகனத்துக்கு மாற்றி அழைத்துச் சென்றதை ஹெலிகாப்டர் ஓட்டியவர் மூலம் காவல்துறையினர் தெரிந்துக் கொண்டனர்.

பிரான்ஸ் நாடெங்கும் அவரை தேடும் பணி நடந்தது.   ஆனால் அவர் தப்பி ஓடிய பாரிஸ் நகரிலேயே இருந்துள்ளார்.   அவரை ஒரு தங்கும் விடுதியில் கண்டுபிடித்து மீண்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   அப்போது அவருடன் அவர் சகோதரர்,  இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் இருந்துள்ளனர்.  அவர்களும் இவருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.