மதுரை:

மதுரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், மின்துறை அமைச்சர் தங்கமணி கொஞ்சம் மதுரை பக்கம் வந்து எட்டிப்பார்க்க வேண்டும்என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழகம் மின்மிகை மாநிலம் என கூறிக்கொள்ளும் தமிழகஅரசு, தற்போது, சென்னை, மதுரை உள்பட பல பகுதிகளில் அதிகரித்து வரும் மின்வெட்டு, அடிக்கடி மின்தடைகள்  குறித்து கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மதுரையில் அரசரடிக்கு உட்பட்ட மின் நிலையத்தில் உட்பட்ட பகுதியான காளவாசல், கோபாலன் தெரு, ஆரோக்கியமாதா தெற்கு மற்றும் வடக்கு தெரு ஆகிய பகுதியில் இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.  நள்ளிரவு கட்டாகும் மின்சாரம் அடுத்த நாள்  காலையில் 7.30 க்கு தான் வருகிறது.

இன்றும் இதே நிலை நீடித்துள்ளது. காலை  (16.6. 2020) 9- 25 மணிக்கு மின் தடை ஏற்பட்டு காலை 11.35மணி  மின்வெட்டு இஇருந்து.  இதுகுறித்த மின்சார வாரியத்திடம் புகார் அளித்தாலும் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதே வேளையில் அருகே உள்ள  கண்மாய் கரை பிரதான சாலையிக்கு அடுத்த விஸ்வா சபுரி 3வது தெரு, 4வது தெரு உள்ளிட்ட பகுதியில் மின்சப்ளை செய்யபடுகிறது. மின்வாரியம் ஒருதலைப்பட்ச மாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள்,  மதுரையில் 104 டிகிரி வெயில் மக்களை வறுத்தெடுத்து வரும் நிலையில்  மின்வெட்டே இல்லை என கூறும் தமிழக மின்துறை அமைச்சர், கொஞ்சம் மதுரை பக்கம் வந்தால்,  மதுரை மின் வாரிய லட்சணம் தெரியும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழக மின்வாரிய அமைச்சர் மதுரை சென்று ஆவன செய்வாரா?