பெங்களுரூ:
பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவை தொடர்ந்து, பெங்களூரில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 15 முதல் 22 வரை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டதாக புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே ஆணையர் என் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தார்.

அடுக்குமாடி வளாகத்தில் ஒன்பது பிரிவுகள் இருப்பதுடன், 1,500 குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் வசித்து வந்த ஆறு பிரிவுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று பிபிஎம்பி தலைவர் கூறினார்.

இந்த மாதத்தில், கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது அடுக்குமாடி வளாகம் இது என்பது குறிபிடத்தக்கது.

கடந்த வாரம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 113 குடியிருப்புவாசிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டு, அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டது.

ஓரிரு நாட்களில் சுமார் 24 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கபட்டது. த்தத்தில், சிபிசி ஏஜென்சி பிபிஎம்பி நகரத்தில் சமீபத்திய 3 கொரோனா பகுதிகள் அடையாளம் காணப்பட்டது. நர்சிங் கல்லூரி மற்றும் இரண்டு குடியிருப்பு வளாகங்களில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகராட்சி அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் பிரசாத், கோவிட் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் மக்கள் சரியாக பின்பற்றாமல் இருப்பதே கொரோனா வழக்குகள் அதிகரிக்க காரணம் என்று தெரிவித்தார். கடந்த ஐந்து நாட்களில் நகரத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகளவில் அதிகரித்துள்ளது.