சூப்பர் ஹிட் ரீமேக்கில் சிம்பு, பார்த்திபன் இணைகிறார்கள்?

பிரித்விராஜ், பிஜுமேனன் மலையாளத்தில் இணைந்து நடித்த ’அய்யப்பனும் கோஷியம்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. சச்சி இயக்கினார். இப்படம் தமிழில் ரீமேக் செய்யும் திட்டம் உள்ளது. அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார் சச்சி. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் திடீர் மரணம் அடைந்தார்.
தற்போது வேறு இயக்குனர் இயக்கத்தில் இப்படம் தமிழில் ரீ மேக் ஆக உள்ளது. இதில் ஒரு கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிப்பார் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது மற்றொரு பொருத்தமான நடிகரை தேடி வந்தனர். அநேகமாக சிம்பு அந்த வேடத்தை ஏற்கலாம் என்று தெரிகிறது.


சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சிம்புவைப் புகழ்ந்து ஒரு மெச்சேஜ் வெளியிட்டிருந்தார். சிம்பு ஏன் நட்சத்திரத்துடன் வேலை செய்யவில்லை என்று ஆச்சரியப்பட்டதுடன் விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வரக்கூடும் என குறிப்பிட்டிருந்தார்.
அநேகமாக ‘அய்யப்பனம் கோஷியம்’ படத்தின் தமிழ் ரீமேக் அறிவிப்பாக இது இருக்கலாம். ரீமேக் பதிப்பில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு மிகவும் திறமை யான நட்சத்திரங்கள்தான் பொருத்தாமாக இருப்பார்கள் என்ற பேச்சு உள்ளது
சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கிறார். மேலும் லாக்டவுனில் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களின் கதை களையும் சிம்பு கேட்டு வருகிறார்.