வேல் யாத்திரைக்கான தடையை நீக்க பாஜக மனு நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

 

சென்னை :

வேல் யாத்திரைக்கான அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு மீதான முதல் கட்ட விசாரணையின் போது, பாஜக-வுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வு வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், பாஜக-வின் வேல் யாத்திரையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை ? என்று அரசுக்கு கேள்வியெழுப்பினர்.

“பாஜக யாத்திரையை நிறைவு செய்யும் டிசம்பர் 6-ந் தேதியை நினைவில் கொள்ள வேண்டும்” என்றும், “முருகன் கோயில்களே இல்லாத வழியில் யாத்திரை செல்வது ஏன்?” என்றும் கேள்வியெழுப்பிய நீதிபதிகள்.

பொது அமைதியுடன் தொடர்புடையது என்பதால் வேல் யாத்திரை பாதையை பாஜக தீர்மானிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

பின்னர் இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.