கவுகாத்தி:

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கால் 15 மாவட்டங்களில் உள்ள 3.55 லட்சம் குடும்பங்கள் பாதித்துள்ளன. தீவிர நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு முதல்வர் சர்பாநந்தா ஸ்னோவல் அழைப்பு விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து அந்தந்த மாவட்ட துணை கமிஷனர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேட்டறிய தலைமை செயலாளர் பைபர்சேனியாவுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதோடு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாகவும் அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமாஜி, லாக்கிம்பூர், பிஸ்வாந்த், பாக்சா, பார்பேட்டா, பொங்கெய்கான், சிராங், கோக்ராஜ்கர், துப்ரி, ஜே £ர்கட், மஜூலி, சிவசாகர், சராய்தியோ, திப்ருகா, தின்சுகியா மாவட்டங்கள் கடந்த ஒரு மாதத்திறகு முன்பு வெள்ளப் பெருக்க ஏற்பட்டது. தற்போது இந்த பகுதிகள் மீண்டும் ஒரு புது வெள்ளத்தால் ப £தித்துள்ளது.

அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அறிவிக்கையின் படி மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் பெய்த தொடர் மழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் 15 மாவட்டங்களின் 781 கிராமங்களை சேர்ந்த 3.55 லட்சம் பேர் பாதித்துள்ளனர்.

பிரம்மபுத்திரா, புரிதிங், தன்ஸ்ரீ, ஜியா பராலி, புதிமாரி, சன்கோஷ் ஆகிய நதிகளின் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 20 ஆயிரம் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 39 மறுவாழ்வு மையங்களில் 14 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.