நேசமணிக்கு கிடைத்த வரவேற்பால் சன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ‘பிரண்ட்ஸ்’ ஒளிபரப்பு…!

‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், சுத்தியல் புகைப்படத்திற்கு , விக்னேஷ் பிரபாகர் என்பவரது காமெடி கருத்தால், உலகளவில் ட்ரெண்டானது #Pray_for_Neasamani.

சமூக வலைதளங்களில் அனைவருமே இந்த ஹேஷ்டேக்கில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

சித்திக் இயக்கத்தில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயர் நேசமணி.

இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, சன் தொலைக்காட்சியிடம் உள்ளது. சமூக வலைதளங்களில் நேசமணிக்கு கிடைத்த வரவேற்பால், ஜூன் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ‘பிரண்ட்ஸ்’ படத்தை ஒளிபரப்புகிறது சன் தொலைக்காட்சி.

இதற்கான விளம்பரப்படுத்துதலில் கூட, நேசமணி நலமாக உள்ளார் என்றுதான் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி