ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறைக்கு நாங்களே காரணம்: இந்து ரக்‌ஷா தளம் அறிவிப்பு

--

டெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறைக்கு இந்து ரக்‌ஷா தளம் என்ற சிறிய அமைப்பு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று இருக்கிறது.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் சிலந நாட்களுக்கு முன்பு ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. . அப்போது, முகமூடி அணிந்த மா்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் மாணவர்களை சரமாரியாக தாக்கியது.

இந்த கொடூர தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

தாக்குதல் தொடர்பாக பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. யார் இந்த தாக்குதலை அரங்கேற்றியது என்பது தெரியாமல் இருந்து வந்தது. தற்போது அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடப்பதால், நாங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து டெல்லி போலிஸ் க்ரைம் பிரான்ச் அதிகாரிகள் குழு ஜவகர்லால் பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளனர். மேலும், தாக்குதல்களின் ஈடுபட்டவர்கள் காணப்பட்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் அடையாளம் காணப்பட உள்ளனர்.