திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: நவம்பர் 1ந்தேதி முதல் அமல்

திருமலை:

திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு  நவம்பர் 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி உலக முழுவதும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. 2022 வது ஆண்டிற்குள் இந்தியாவில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை் முழுமையாக தடை செய்யப்படும் உறுதி மொழி எடுத்துள்ளது, பல மாநிலங்களில் பிளாஸ்டிக் தடை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 2019ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், திருப்பதியில் நவம்பர் 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது. திருப்பதி நகராட்சி முழுவதும் அக்டோபர் 2ந்தேதி காந்தி ஜெயந்தி முதல் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், திருப்பதி கோவில் பகுதியில் வரும் 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன்படி,  50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் தடை தொடர்பாக  திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர் களிடம் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடினர். அதில் திருமலையில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்யப்படுகிறது. இனி அவற்றை தவிர்க்க வேண்டும்.

திருமலையில் உள்ள உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டிருப்பதை திருமலைக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.