24ந்தேதி முதல் ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ புதிய நாளிதழ்: ஓபிஎஸ் டுவிட்

சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலிதாவின் பிறந்த நாள் வரும் 24ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக   “நமது புரட்சித்தலைவி அம்மா” என்ற பெயரில் தமிழ் நாளிதழ் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழகாக இருந்த நமது எம்ஜிஆர் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டதால், அதிமுகவுக்கு என்று தனி நாளிதழ் இல்லாத நிலையில், “நமது புரட்சித்தலைவி அம்மா”  என்ற புதிய நாளிதழ் தொடங்கப்பட உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு மற்றும் டிவி சேனர்கள் சசிகலாவின் குடும்பத்தினர் கைகளுக்கு சென்றது. இதையடுத்து, அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. பேச்சாளரான ஜெய கோவிந்தன் நடத்தி வந்த நமது புரட்சித்தலைவி அம்மா என்ற நாளிதழ் அதிமுக கட்சிக்கு என அதிகாரப்பூர்வமாக வாங்கப்பட்டது.

இந்த நாளிதழ் ஜெ. பிறந்தநாளான வரும் 24ந்தேதி வெளியாவதாக அதிமுக உறுதி செய்துள்ளது. இதுகுறித்து டுவிட் செய்துள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்,

அஇஅதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடு, “நமது புரட்சித்தலைவி அம்மா” தமிழ் நாளிதழ் – பிப்ரவரி 24 முதல் தமிழகம் முழுவதும் என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரிலும் இத்தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி