மும்பை

ரும் ஏப்ரல் 7 முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.   கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல்14 வரை உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கலாம் எனப் பலரும் கூறி வருகின்றனர்.  தேசிய ஊரடங்கு காரணமாக ஐபிஎல் போன்ற நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

கடந்த சில நாட்களாக உலக பங்குச் சந்தை சரிந்து வருவதால் இந்தியாவிலும் அதே நிலை நிலவுகிறது.  இந்திய பங்குச் சந்தையின் குறியிட்டு எண் 40000 க்கு மேல் இருந்த நிலை மாறி தற்போது 27000 ஆகி உள்ளது.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தற்போது ரூ.76.60 ஆகி உள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பங்குச் சந்தை இதற்கு முன்பு இரவு 11.30 வரை நடந்து வந்தது.  அதன் பிறகு அது மாலை 5 மணியாக குறைக்கப்பட்டது.  தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் பங்கு வர்த்தகம் மிகவும் வேகம் குறைந்துள்ளது.  இதனால் வரும 7 ஆம் தேதி முதல் பங்கு வர்த்தகம் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வரும் திங்கள் கிழமை அதாவது ஏப்ரல் 6 அன்று மகாவீரர் ஜெயந்தி என்பதால் பங்கு வர்த்தகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அதனால் அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 7 முதல் இந்த நேர மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.