டில்லி:

எம்.பி.க்களுக்கான சம்பளம் மற்றும் படி உயர்வு தொடர்பாக நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அளித்த அனைத்து திட்டங்களையும் சம்பளத்துக்கான இணைக்குழு அங்கீகரித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய சம்பள தொகுப்பு அமலுக்கு வருகிறது.

கடந்த பிப்ரவரி பட்ஜெட்டில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள், எம்.பி.க்கள் சம்பள உயர்வு குறித்த உத்தரவாதத்தை நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்திருந்தார். இதன் அடிப்படையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய சம்பளம் மற்றும் படி தொகுப்பு விபரம்

சம்பளம்

தற்போது ரூ.50,000.

அமைச்சக பரிந்துரை (ஒப்புதல்) மாதம் ரூ.1 லட்சம்.

உயர்வு மாதம் ரூ.50,000.

பர்னிச்சர்

தற்போது 5 ஆண்டுக்கு ஒரு முறை ரூ.75,000.
இணைக்குழு பரிந்துரை ரூ.1.5 லட்சம்.
அமைச்சக பரிந்துரை (ஒப்புதல்) ரூ.1 லட்சம்.
ரூ. 25 ஆயிரம் உயர்வு.

அலுவலக செலவுப்படி

தற்போது மாதம் ரூ.45,000.
இணை குழு பரிந்துரை மாதம் ரூ.75,000.
அமைச்சக பரிந்துரை (ஒப்புதல்) மாதம் ரூ.60,000
உயர்வு மாதம் ரூ.15,000.

தொகுதி படி

தற்போது மாதம் ரூ.45,000.
இணை குழு பரிந்துரை மாதம் ரூ.75,000.
அமைச்சக பரிந்துரை (ஒப்புதல்) மாதம் ரூ.70,000.
உயர்வு மாதம் ரூ.25,000.

அதிவேக இன்டர்நெட்

மாதம் ரூ.2,200. 2017 ஜனவரி முதல் வழங்கப்பட்டு தொடரும்.