மும்பை

காராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

கொரோனா பாதிப்பைத் தடுக்க மத்திய அரசு தேசிய ஊரடங்கை வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

ஏப்ரல் 20 முதல் கொரோனா பாதிப்பு அளவைப் பொறுத்து மாநில அரசுகள் ஊரடங்கு விதிகளைத் தளர்த்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த அடிப்படையில் மகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகளைத் தளர்த்த அரசு உத்தேசித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஏப்ரல் 20க்கு பிறகு தொடங்க உள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஊரடங்கு விதிகள் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றி நடத்தப்பட உள்ளன.

சமூக, மத, ஆன்மீக கூட்டங்களுக்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.