கேரள கோவில்களில் ஆகஸ்ட்17 ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி

திருவனந்தபுரம்

கஸ்ட் 17 ஆம் தேதி முதல் கோவில்களில் தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் உள்ள அனைத்து கோவில்களிலும் மார்ச்22 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டது.  அவ்வகையில் கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கேரள மாநிலத்திலும் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி சபரிமலை தவிர மற்ற கோவில்களில் வெளிப்பிரகாரம் வரை சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் அதாவது மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் சபரிமலை தவிர மற்ற கோவில்களுக்குள் சென்று தரிசிக்க அனுமதி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   காலை 6 மணிக்கு முன்பும், மாலை 6.30-7 மணிக்கு இடையிலும் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.

அத்துடன் 10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.