ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டி!!

சென்னை:

ஆர்.கே நகரில் பா.ஜ.ரீ சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகருக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

நடிகர் விஷாலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.