ஜனவரி 4 முதல் கேரளாவில் கல்லூரிகள் திறப்பு

திருவனந்தபுரம்

ரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.   அதன் பிறகு அகில இந்திய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.   தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு பணியாக தொடங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் கேரளாவில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.   இதையொட்டி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ வரும் ஜனவரி 4 முதல் மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.  எனவே வரும் 28 ஆம் தேதி முதல் கல்லூரி முதல்வர், ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் அனைவரும் கல்லூரிகளுக்கு வர வேண்டும்.  கல்லூரிகள் காலை 8.30 முதல் மாலை 5.30 வரை செயல்பட வேண்டும்.

வகுப்புக்கள் 5 மணி நேரம் நடைபெற வேண்டும் என்பதால் தேவைக்கேற்ப 2 ஷிஃப்டுகளாக வகுப்புக்களை நடத்தலாம். சனிக்கிழமைகளில் கல்லூரி செயல்படலாம்.  அத்துடன் செமஸ்டர் அடிப்படையில் 50% மாணவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வகுப்புக்கள் நடத்தலாம்,  கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் 5ஆவத் மற்றும் ஆறாவது செமஸ்டர் மாணவர்களையும் அனைத்து முதுகலை மாணவர்களையும் வகுப்புக்களில் அனுமதிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.