சென்னை

மிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள்  19 ஆம் தேதி முதல் மூடப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதில் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ளன.

எனவே இந்த மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.  இதனால் இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள ரயில் நிலையங்கள் ஜூன் 19 ஆம் தேதி முதல் மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இந்த தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்தோர் தங்கள் டிக்கட்டை ரத்து செய்து ஜூன் 19க்கு முன்போ அல்லது ஜூன் 30க்கு பிறகோ பணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.