நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:
நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மார்ச் 8ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்ற வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே ஆஜராக வேண்டும் என்றும், வழக்கறிஞர்களின் அறைகள் மூடப்படும் என்பதால் நாளை வரை ஆவணங்களை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய உள்ளதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.