தாய்லாந்து குகையில் இருந்து இதுவரை 7 சிறுவர்கள் மீட்பு
பாங்காங்:
தாய்லாந்து குகையில் இருந்து இன்று 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் இது வரைமீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணி சில தினங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீட்பு குழுவினர் நேற்று 3 சிறுவர்களை மீட்டனர். மீதமுள்ளஉள்ள சிறுவர்களை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது. இன்று 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதோடு சேர்த்து இது வரை 7 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் மீட்க தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.