டெல்லி:

பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் ஒரே விதிதான் என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். . ஊராட்சி தலைவரோ, பிரதமரோ, இந்தியாவின் சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை என்றார்.

கொரோனா பெரும்தொற்றுக்கு எதிரான போரில் நாம் தளர்வு விதிமுறை 2.0 க்குள் நுழைந்திருக்கிறோம். அதே சமயம், தளர்வு விதிமுறைகள் 1.0 அமலாக்கப்பட்டதிலிருந்து தனிப்பட்ட மற்றும் சமூக நடத்தையில் அதிகரிக்கும் அலட்சியத்தையும் நாம் பார்க்கிறோம்
இந்த தளர்வு நேரத்தில் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்; விதிகளை மீறுவோரை அதிகம் எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது!”
“அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன!” ஊரடங்கின் போது பட்டினியால் ஒருவரும் உயிரிழக்கவில்லை.

பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. மழைக்காலம் தொடங்கவுள்ள தால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
பிற நாடுகளை ஒப்பிடும்போது நாம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முன்னோடியாக இருக்கின்றோம் இப்போது செய்யக்கூடிய சிறு தவறுகள் கூட பெரிய இழப்புகளை கொண்டுவரலாம் பல இடங்களில் பொதுவாக பொதுமக்கள் கடை பிடிக்கவில்லை மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்

தற்போதைய சூழ்நிலையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது கட்டுப்பாடுகள் மூலம் பல லட்சம் ரூபாய்களை நாம் மிச்சப்படுத்தி உள்ளோம் கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் அனைவருக்கும் பொருந்தும்.

பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால் கரீப்  கல்யாண் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படு கின்றது.கொரோனா கால கட்டத்தால் கரீப்  கல்யாண் திட்டத்தின் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்படும்.
பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதி தான். விதிமீறலுக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம்.
து 130 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கையாகும். ஊராட்சி தலைவரோ, பிரதமரோ, இந்தியாவின் சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.