இன்று முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்காக 38 மின்சார ரயில்கள் இயக்கம்.

சென்னை

ன்று முதல் அத்தியாவசிய மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்காக சென்னையில் 38 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மாதிரி புகைப்படம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அப்போது சென்னையில் ஓடும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.   அதன் பிறகு பல கட்டமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.    ஆயினும் பொதுமக்களுக்கான மின்சார ரயில் சேவை நடக்கவில்லை.

தெற்கு ரயில்வே ஊரடங்கு காலத்தில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்காக, கடற்கரை – செங்கல்பட்டு, வேளச்சேரி,  மூர்மார்க்கெட் – அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் 28 மின்சார ரயில்களை இயக்கி உள்ளது.   தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த ரயிலில் அனுமதி அளிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன.

இதையொட்டி தென்னக ரயில்வே மேலும் 10 மின்சார ரயில்களை இன்று முதல் கூடுதலாக இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் இன்று முதல் 38 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.  ஆனால் இந்த ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.