மும்பை

ன்று முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்க மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளது.

 

file picture

கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தேசிய ஊரடங்கை மத்திய அரசு அமலாக்கியது.   அதையொட்டி மக்கள் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.   அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோவில், திருப்பதி கோவில், உள்ளிட்ட பல வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

தற்போது ஊரடங்குக்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.    அவ்வகையில் திருப்பதி உள்ளிட்ட ஒரு சில கோவில்கள் கடுமையான வழிகாட்டு நெறி முறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன.  அவ்வகையில் மகாராஷ்டிர மாநில அரசு இன்று முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதி அளித்துள்ளது.

சுமார் 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் இந்த வழிபாட்டு தலங்களுக்கு வருவோருக்கு முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   சீரடி சாய்பாபா கோவிலில் ஒரு நாளைக்கு 6000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது.   இங்கு வருவோருக்கு வாசலில் சானிடைசர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை போல் பல கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் மும்பை நகரில் உள்ள பிரபல வழிகாட்டு தலங்களான மும்பா தேவி ஆலயம், சித்தி விநாயர் ஆலயம், மாகிம் தர்கா உளிட்டவைகளும் திறக்கப்பட்டுள்ளன.  இன்று காலை முதல் இவை அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.