சென்னை

ன்று முதல் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கல்விச் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் 1,63,154 இடங்கள் அரசுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.   தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்க 1.12 லட்சம் பேர் தகுதி பெற்றனர்.

இதில் அக்டோபர் 1 முதல் 7 வரை விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.  இதில் மொத்தம் 7,435 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.  இதில் 497 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

 இன்று முதல் பொதுப்பிரிவு அற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளதாகத் தொழில் நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.   இதில் தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வு 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 4 கட்டங்களாக வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.