இன்று புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

புதுச்சேரி

ன்று முதல் புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கை முன்னிட்டு இந்தியா முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.

தற்போதைய ஊரடங்கில் அந்தந்த இடங்களின் நிலையைப் பொறுத்து இன்று முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரிப்பதால் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் இன்று முதல் திறக்கபட்டுள்ள்ளன.

கோவிலில் தரிசனத்துக்கு செல்வோர் சமூக இடைவெளியைப் பின்பற்றிச் செல்கின்றனர்.

தேவாலயங்களில் மிகவும் குறைவான மக்களே பிரார்த்தனைக்கு வந்துள்ளன.

வரிசையில் நிற்பவர்களும் போதிய இடைவெளியுடன் நின்றுசெல்கின்றனர்.