சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக பதவி ஏற்றதும் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற அறிவித்தார். இந்நிலையில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. மேலும் அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.
மூடப்படும் கடை உபரி ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்திலேயே வேறு பணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலம் : 105 கடைகள், 63 பார், கோவை மண்டலம்: 44 கடைகள் 20 பார்கள், திருச்சி மண்டலம்: 119 கடைகள், 23 பார்கள், மதுரை மண்டலம்: 99 கடைகள், 37 பார்கள், சேலம் மண்டலம்: 133 கடைகள், 26 பார்கள் மூடப்படுகின்றன.