நாளை முதல் தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் தொடர்

டில்லி

சுமார் 30 வருடங்களுக்கும் முன்பு பலராலும் பார்த்து ரசிக்கப்பட்ட ராமாயணம் தொடர் நாளை முதல் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது.

கடந்த 1980 களின் இறுதியில் தூர்தர்ஷனில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது.  தனியார் தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாத அந்தக கால கட்டத்தில் பலராலும் விரும்பி பார்க்கப்பட்ட தொடராக அது விளங்கியது.

ஞாயிறு காலைகளில் ராமாயானம் தொடர் ஒளிபரப்பும் போது ஊரே வெறிச்சோடிக் கிடந்தது.  அந்த தொடருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்  அவர்களுக்கு மகிழ்வூட்டும் தகவல் வந்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ”நாளை முதல் தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகும்.  காலை 9 முதல் 10 மணி வரை ஒரு அத்தியாயமும், மற்றொன்று இரவு 9 முதல் 10 மணி வரையும் ஒளிபரப்பாகும்” என அறிவித்துள்ளார்.