நாளை முதல்  ஜியோவில் இருந்து கட்டுப்பாடின்றி இலவச அழைப்புகள் செய்ய அனுமதி

மும்பை

நாளை முதல் ஜியோவில் இருந்து அனைத்து நெட் ஒர்க் தொலைப்பேசிகளுக்கும் கட்டுப்பாடின்றி  இலவச அழைப்புக்கள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,.

ரிலையன்ஸ் ஜியோ தற்போது இந்தியாவில் அதிக அளவில் சந்தாதாரர்களை பெற்றுள்ளது.  இப்போது ஜியோவில் இருந்து ஜியோவுக்கு அழைப்புக்கள் செய்ய எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது அனைத்து அழைப்புக்களும் இலவசமாகும்.   ஆனால் ஜியோவில் இருந்து வேறு நெட் ஒர்க்குகளுக்கு அழைப்புக்கள் செய்யக் குறிப்பிட்ட நிமிடங்கள் கெடு உள்ளன.  அதைத் தாண்டினால் நிமிடத்துக்கு ஆறு பைசா வசூலிக்கப்படுகிறது.

ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வோல்ட் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் அளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.   இதையொட்டி தற்போது எங்கள் வாடிக்கையாளர்களால் அனைத்து ஜியோ எண்களுக்கு இலவச அழைப்பு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி செய்ய முடிகிறது.

ஏற்கனவே ஐ சி யு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்ட உடன் அனைத்து உள்நாட்டு அழைப்புகளுக்கும் கட்டணம் பூஜ்ஜியமாக மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளோம்.   அதையொட்டி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அனைத்து உள்நாட்டு குரல் அழைப்புகளும் இலவசமாகிறது.  எனவே ஜியோவில் இருந்து வேறு நெட் ஒர்க் எதற்கு அழைத்தாலும் கட்டுப்பாடற்ற இலவசம் ஆகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.