நாளை முதல் கர்நாடகாவில் ஊரடங்கு இல்லை : முதல்வர் அதிரடி

பெங்களூரு

ரடங்கு பிறப்பித்தும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால் நாளை முதல் ஊரடங்கு இல்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

அகில இந்திய அளவில் கொரோனா பரவுதலில் கர்நாடகா 45 ஆம் இடத்தில் உள்ளது   இதுவரை 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டு 1400க்கும் மேல் மரணம் அடைந்துள்ளனர்.    இங்கு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையொட்டி இன்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிவிப்பில் நாளை முதல் கர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.   தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடு தொடரும் எனவும் அவர் கூறி உள்ளார்.

முதல்வர், “நாம் கொரோனாவுடன் போரிடும் அதே வேளையில் திடமான பொருளாதாரத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.  எனவே தனிமைப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் உள்ளோர் நாளை முதல் தங்கள் வழக்கமான பணிகளைத் தொடங்கலாம்.

கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரிக்க மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வருவோர் தான் காரணம்.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை கையாள உள்ளோம்.  அவை, தேடுதல், கண்டறிதல், சோதித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் தொழில் நுட்பம் பயன்படுத்தல் ஆகியவை ஆகும்” என தெரிவித்துள்ளார்.