நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு

சென்னை:
நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, கடந்த மே மாதம் முதல் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட்டன.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நண்பகல் 12.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் இதுவரை திறக்கப்படவில்லை. நாளை முதல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்து 200 டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed