சென்னை

நாளை அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மாநகர பேருந்துகளில் முதியோர்கள் இலவச பயண டோக்கன் மீண்டும் வழங்க்கப்படுகிறது.

File picture

சென்னை மாநகர பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் இலவசமாகப் பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம் இந்த டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.  தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்து போக்குவரத்து வழக்கமான அளவில்  இயங்கி வருகின்றன.

இதையொட்டி நாளை அதாவது  பிப்ரவரி 15 முதல் முதியோர்கள் இலவச பேருந்து பயண டோக்கன்களை பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.  அதன்படி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு 10 வீதம் 6 ,மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன்.

இதற்காக 21 பணிமனைகள், மற்றும் 19 பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து பயண அட்டைகள் முதியோர்களுக்கு வழங்கப்பட உள்ளன.  புதியதாக இந்த சலுகையைப் பெற விரும்புவோர் www.mtcbus.tn.gov.in என்னும் இணைய தளத்தில் விண்ணப்பங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.